Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீதக்ஷிணாமூர்த்யஷ்டகம் 1 விச்வம் தர்பண த்ருச்யமான நகரீதுல்யம் நிஜாந்தர்கதம் பச்யந்நாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா! ய:ஸாக்ஷ£த்குருதே ப்ரபோ

ஸ்ரீதக்ஷிணாமூர்த்யஷ்டகம்

1.விச்வம் தர்பண த்ருச்யமான நகரீதுல்யம் நிஜாந்தர்கதம்

பச்யந்நாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா!

ய:ஸாக்ஷ£த்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மானமேவாத்வயம்

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

கண்ணாடியில் காணும் ஊர்போல் தன்னிடம் உலகத்தைக் காண்கிறார். அது, மாயையினால், வெளியே காண்பதுபோல் ஸ்வப்னதிசையிலும் காண்பதாகும் உண்மையை ஜ்ஞானம் வந்தபொழுது விழித்துக்கொண்ட பொழுது தனதாத்மாவை அது ஒன்றையே காண்கிறார். அப்படிப்பட்ட குருவான தக்ஷிணாமூர்த்திக்கு இதோ நமஸ்கரிக்கிறேன்.

2.பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங்நிர்விகல்பம் புன:

மாயாகல்பிததேசகால கலனாவைசித்ர்ய சித்ரீக்ருதம்!

மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹாயோகீவ ய:ஸ்வேச்சயா

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

இந்த உலகு தோன்றுவதற்குமுன், விதைக்குள்ளிருக்கும் முளைபோல் எவ்வித பாகுபாடும் இல்லாதிருந்தது. பின் மாயையினால் தோற்றுவித்த பல தேசம், காலம் ஆகியவற்றின் வெவ்வேறு தன்மையினால் வேறு பட்டதாகக் காணப்படுகிறது. அப்படியான உலகத்தோற்றத்தை ஒரு மயாஜால மறித்தவனோ, அல்லது மஹாயோகியோ போல தனது விருப்பப்படி பலபடியாக விஸ்தரிக்கும் திறமைகொண்ட ஸ்ரீகுருவான தக்ஷிணாமூர்த்திக்கு இதோ நான் நமஸ்கரிக்கிறேன்.

3.யஸ்யைவஸ்புரணம் ஸ்தாத்மகமஸத்கல்பார்த்தகம் பாஸதே

ஸாக்ஷ£த் தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஸ்ரீதான்!

யத்ஸாஷ்த்கரணாத்பவேத் ந புனராவ்ருத்திர் பவாம் போநிதௌ

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

எதன் (ஆத்மாவின்) வெளிப்பாடு உண்மையில் இருப்பதாயினும், இல்லாதவஸ்து போல் மிளிர்கின்றதோ, தத்வமஸி என்ற வேதவாக்யத்தால் தனது ப்ரியசிஷ்யர்களுக்குத்தானே எவறொருவர் அறிவுருத்துகிறாரோ, அந்த ஒன்றாத் தெளிவாக நேரே கண்டுவிட்டால் ஸம்ஸாரக்கடலில் மறுபிறவி நேராதோ அந்த ஸ்ரீகுருவான தக்ஷிணாமூர்த்திக்கு இதோ நமஸ்கரிக்கிறேன்.

4.நாநாச்சித்ரகடோதர ஸ்தித மஹாதீபப்ரபா பாஸ்வரம்

ஜ்ஞானம்யஸ்ய து சக்ஷ§ராதிகரணத்வாரா பஹி:ஸ்பந்ததே!

ஜானாமீதி தமேவபாந்த மனுபாதி ஏதத்ஸமஸ்தம்ஜகத்

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

பலத்வாரங்களுள்ள குடத்தினுள் தீபத்தின் ஒளி எப்படி அந்த துவாரங்கள் வழியாக வெளியே தெரியுமோ அவ்வாறு ஆத்மாவின் (உள்ளளியின்) வெளிப்பாடு கண், காது ஆகிய புறக்கரணங்கள் வழியாக வெளியே தெரிகிறது. மேலும், எல்லாமறியும் அவ்வாத்மா ஒளிர்வதைத் தொடர்ந்து இந்த உலகம் முழுவதும் ஒளிர் பெறுகிறது. அப்படிப்பட்ட குருவான தக்ஷிணாமூர்த்திக்கு இதோ நமஸ்கரிக்கிறேன்.

5.தேஹம்ப்ராண மபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:

ஸ்த்ரீபாலாந்த ஜடோபமாஸ்த்வஹ மிதிப்ராந்தாப்ருசம் வாதின:!

மாயாசக்தி விலாஸ கல்பிதமஹாவ்யா மோஹஸம்ஹாரிணே

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

அஹம்பத வாச்யமான ஆத்மா எது?ப்ரமித்துப்போய் ஏதேதோ பேசுவர் ஸ்த்ரிகள், சிறுவர்கள், குருடர், ஜடர்கள் போன்றவர், உடல் அல்லது பிராணன், அல்லது இந்திரியங்கள் அல்லது உறுதியில்லாத புத்திதான் அஹம்பதவாச்யம் எனக் கூறுவர். இவ்வாறான மாயா சக்தி வலிமையால் தோற்றுவிக்கப்பட்ட பெரும் மயக்கத்தைப் போக்குபவரான குரு தக்ஷிணாமூர்திக்கு நமஸ்காரம்.

6.ராகுக்ரஸ்ததிவாகரேந்துஸத்ருசோ மாயாஸ மாச்சாத நாத்

ஸன்மாத்ர:கரணோபஸம்ஹரணதோ போsபூத்ஸுஷ§ப்த:புமான்!

ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோதஸமயே ய:ப்ரத்யபிஜ்ஞாயதே

தஸ்மை ஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே!!

மாயை மூடியதால், ராஹ§மறைந்த சூர்யன், சந்திரனைப் போன்று (கண்களுக்குப் புலப்படாமல்) இருக்கிறார் என்று மட்டும் குறிக்கப்படுவர். ஜ்யான, கர்மேந்த்ரியங்கள் ஒடுங்கியதால் நன்கு ஸ்வாபம் கொண்டவராய், ப்ரபோத (ஜ்யானம் உண்டாகியபின்) ஸமயத்தில் முன்பு நன்கு உறங்கினேன். என்று நினைவுறத்தகுந்தவர், அந்த குரு தக்ஷிணாமூர்த்திக்கு இதோ நமஸ்காரம்.

7.பால்பாதிஷ்வபி ஜாக்ரதாதிஷ§ ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி

வ்யாவ்ருத்தாஸ்வனு வர்த்தமான மஹமித்யந்த:ஸ்புரந்தம் ஸதா!

ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

இளமை முதலிய நிலைகளிலும், ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷ§ப்தி முதலிய நிலைகளிலும் கூட - திரும்பத்திரும்ப வருபவை அவை - தொடர்ந்து வருகின்ற அஹம் பதவாச்யமாய் அந்த கரணத்தில் ஒளிரும் ஆத்மஸ்வரூபத்தை சீரிய சின்முத்ரையால் பக்தர்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும் குருதக்ஷிணாமூர்த்திக்கு இதோ நமஸ்காரம்.

8.விச்வம் பச்யதி கார்யகாரணதயாஸ்வஸ்வாமிஸம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ரு புத்ராத்யாத்மனா பேதத: I

ஸ்வப்னே ஜக்ரதி வா யஏஷபுருஷோ மாயாபரிப்ராமித:

தஸ்மை ஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயேமிமி

மாயையின் காரணமாக ப்ரமிப்பு அடையச் செய்யப்பட்டபுருஷன், இந்த உலகினை கார்ய-காரணஸம்பந்தம் உள்ளதுபோலவும், ஸ்வஸ்வாமிஸம்பந்தம் உடையது போலவும் அல்லது சிஷ்ய ஆசார்யசம்பந்தம் உள்ளது போலவும், அல்லது பிதா-புத்ரஸம்பந்தம் உள்ளதாகவும் காண்கிறான். இவ்வாறு ஸ்வப்ன ஜாக்ரத் அவஸ்தைகளில் நிகழந்தவண்ணம் உள்ளது. அந்ததக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம்.

9.பூரம்பாம்ஸ்ய நலோsநிலோsம்பரமஹர் நாதோ ஹிமாம்சு:புமான்

இத்யா பாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் I

நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரஸ்மாத்விபோ:

தஸ்மைஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்யே!!

பூமி, தண்ணீர், b, காற்று, ஆகாயம், சூர்யன், சந்திரன், புருஷன் என்றபடி கரமாயும் அசரமாயும் உள்ள உலகம் எந்த பிரம்மத்தின் எட்டுவிதமூர்த்திகளாக உள்ளனவோ, எந்த ஒருபரமாமஸ்வரூபத்தைக்காட்டிலும் வேறு ஒன்றுமே இல்லையோ அப்படிப்பட்ட குருமூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம்.

10.ஸர்வாத்மத்வமிதம் ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின்ஸ்தவே

தேநாஸ்ப ச்ரவணாத்ததர்த்தமனனாத் த்யானாத் ச ஸங்கீர்தனாத்மி

ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாத் ஈச்வரத்வம் ஸ்வத:

ஸித்யேத் தத்புநஷ்டதா பரிணதம் சைச்வர்ய மவ்யாஹதம் II

பரம்பொருள் எல்லாமாய் இருக்கும் என்ற நிலை இந்தஸ்தோத்ரத்தில் தெளிவாக்கப்பட்டது. ஆகவே இந்த ஸ்தோத்ரத்தை கேட்டும், அதன் அந்த்தத்தை சிந்தித்தும் த்யானம் செய்தும், வாய்விட்டு சொல்லியும்வந்தால், எல்லாமாய்த்திகழும் பெரும் பாக்கியம் பெறுவதன்னியில் ஈஸ்வரத் தன்மையும் அடையலாம் முக்யமாக, எட்டுவிதமூர்த்தியாகப் பரிணமித்த ஈச்வரத் தன்மையும் குறைவிலாது கிடைக்கும்.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்யஷ்டகம் முற்றிற்று.

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it