Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நவரத்னமாலிகா 1 ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவயசோபினீம் காரணேச்வரமௌலி கோடி பரிகல்ப்யமான பதபீடிகாம் I காலகாலபணிபாச பாணதனு ரங்குசாமருணமேகலாம் பாலபூ

நவரத்னமாலிகா

1.ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவயசோபினீம்

காரணேச்வரமௌலி கோடி பரிகல்ப்யமான பதபீடிகாம் I

காலகாலபணிபாச பாணதனு ரங்குசாமருணமேகலாம்

பாலபூதிலக லோசனாம் மனஸி மனஸி பாவயாமி பரதேவதாம் II

ஹாரம், காற்சதங்கை, கிரீடம், குண்டலம், இவற்றால் அலங்கரிக்கப்பட்ட அவயங்களால் அழகாக இருப்பவளும், பிரம்மா முதலிய காரணதேவதைகளின் தலைமுனைகள் சேர்ந்து ஏற்படுத்திய பாதபீடத்தையுடையவளும், மிகக் கரிய நாகங்கள், பாசம், பாணம், வில், அங்குசம் இவற்றுடன் கூடியவளும், சிவந்த மேகலையணிந்தவளும், நெற்றியில் இட்ட திலகமாகிய கண்ணையுடையவளுமான பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன்.

2.கந்தஸார கனஸார சாருநவ நாகவல்லி ரஸ வாஸினீம்

ஸாந்த்ய ராகமதுரா தராபரண ஸுந்தராநந சுசிஸ்மிதாம்

மந்தராயதவிலோசனா மமலபாலசந்த்ரக்ருதசேகராம்

இந்திராரமண ஸோதரீம் மனஸிபாவயாமி பரதேவதாம்

வாசனை பொருந்திய கற்பூரம் அழகிய புது வெற்றிலை இவற்றின் சாறு சுவைத்து நறுமணம் கொண்டவளும், மாலைச் செம்மானம்போல் அழகிய உதட்டுச் சாயமும், தூய புன்முறுவலும் கொண்ட முகத்தையுடையவளும், நிர்மல பிறை சந்திரனையணிந்தவளும், லக்ஷ்மீபதியான நாராயணின் சகோதரியுமான பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன்.

3.ஸ்மேரசாரு முகமண்டலாம் விமலகண்டலம்பி மணிமண்டலாம்

ஹாரதாம பரிசேபமான குசபார பீருதனுமத்யமாம்

வீரகர்வ ஹரநூபுராம் விவித காரணேச வரபீடிகாம்

மாரவைரிஸஹ சாரிணீம் மனஸிபாவயாமி பரதேவதாம்

மன்மதனின் பகைவரான பரமேச்வரன் மனைவியான பரதேவதையின் மனதில் த்யானிக்கிறேன். அவள், புன்முறுவல் பூத்த அழகிய முகமண்டலம் கொண்டவள். சுத்தமான கன்னத்தின் கீழே தொங்கும் மணிக்காதோலையுடையவளும், ஹார வரிசைகள் அழகுறச் செய்த ஸ்தனபாரத்தினால் பயந்ததுபோல மிகக் குறுகிய இடையுடையவளும், வீரர்களுக்கே கர்வத்தைப் போக்கும் காற் சதங்கை கொண்டவளும், பிற்கால காரணேசர்களால் தாங்கப்படும் ஆஸனமுடையவளாயும் திகழ்கிறாள் அவ்வம்பிகை.

4.பூரிபாரதரகுண்டலீந்த்ரமணிபத்த பூவலய பீடிகாம்

வாரராசி மணிமேகலாவலய வஹ்நிமண்டல சரீரிணீம் I

வாரிஸார வஹகுண்டலாம் ககனசேகரீம் ச பரமாத்மிகாம்

சாருசந்த்ர விலோசனாம் மனஸி பாவயாமி பரதேவதாம்மிமி

மிகுந்த பாரத்தை தாங்கும் ஆதிசேஷன் மூலம் கிடைத்த மணிகள் பதித்த பூவலமாகிய பீடத்தையுடையவளும், சமுத்திரத்திலிருந்து கிடைத்த மணிகளான மேகலையைச் சுற்றிய b மண்டலமோவென்ற சரீரத்தையுடையவளும், மேகங்களாகிய குண்டலமும், ஆகாயமாகிய தலையும் கொண்டு பரம்பொருளால், அழகிய சந்திரன், சூர்யர்களாகிய கண்களும் உடைய பரதேவதையை மனதில் த்யானிக்கிறேன்.

5.குண்டலத்ரிவித கோண மண்டல விஹார ஷட்தல ஸமுல்லஸத்

புண்டரீக முகபேதினீம் தருணகண்டபானு தடிது ஜ்வலாம் II

மண்டலேந்து பரிவாஹிதாம் ருததரங்கிணீ மருணரூபிணீம்

மண்டலாந்தமணி தீபிகாம் மனஸி பாவயாமி பரதேவதாம் II

பிந்து, த்ரிகோணம், ஷட்கோணம், நவகோணம் இவற்றிலின்றி ஆறுதலங்களிலும் இருந்துகொண்டு சூர்யன், மின்னல் இவைபோல் பிரகாசிப்பவளும், பூர்ண சந்திரனிலிருந்து பெருகிஒடும் அம்ருத நதியாக இருப்பவளும், செந்நிறமானவளும், வட்டத்தில் அமைந்த மணிதீபம் போன்றிருப்பவளுமான பரதேவதையை தியானிக்கிறேன்.

6.வாரணாநத மயூராஹ முகாஹ வாரணபயோதராம்

சாரணாதிஸுரஸுந்தரீசிகுரகேசரீக்ருதபதாம் புஜாம் I

காரணாதிபதிபஞ்சக ப்ரக்ருதி காரண ப்ரதம மாத்ருகாம்

வாரணாந்த முகபாரணாம் மனஸிபாவயே பரதேவதாம் II

யானை முகத்தவன், மயூர வாவஹனன் ஆகியோரது தாகம் தணிக்கும் ஸ்தலங்களையுடையவளும், சாரணர் முதலிய தேவி கன்னியர் கேசங்களின் மேல் அணியாகச் செய்யப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவளும், காரணேச்வரர் ஐவரின் முதற்காரணமாயும், முதல் மாத்ருதேதையாயும் இருப்பவளும், கணேசப் பெருமானுக்கு ஆனந்தமளிப்பவளுமான பரதேவதையை த்யானிக்கிறேன்.

7.பத்மகாந்தி பதபாணி பல்லவ பயோதராநந ஸரோருஹாம்

பத்மராக மண்மேகலா வலய நீவிசோபித நிதம்பிநீம் I

பத்மஸம்பவ ஸதாசிவாந்தமய பஞ்சரத்னபதபீடிகாம்

பத்மினீம் ப்ரணவரூபிணீம் மனஸிபாவயாமி பரதேவதாம் II

தாமரை நிறமொத்த கால், கை, பயோதரம், முகம் இவற்றை கொண்டவளும், பத்மராகக் கல் பதிந்த ஒட்டியாணம் சுற்றி அழகான இடைப்பாகங் கொண்டவளும், பிரம்மா முதல் ஸதாசிவர் வரையிலான ஐவர் அடங்கிய பாதபீடம் உடையவளும், லக்ஷ்மியாயும், ஒங்கார ரூபிணியாயும் இருக்கிற பரதேவதையை தியானிக்கிறேன்.

8.ஆகம ப்ரணவபீடிகா மமலவர்ண மங்கல சரீரிணீம்

ஆகமாவயவசோபிணீ மகில வேதஸாரக்ருத சேகரீம் I

மூலமந்த்ர முகமண்டலாம் முதிதநாத பிந்து நவயௌவநாம்

மாத்ருகாம் த்ரிபுரஸுந்தரீம் மனஸி பாவயாமி பரதேவதாம்மிமி

ஆகமங்களும் பிரணவமும் பீடமாகக் கொண்டவள், சுத்த வர்ணமாலிகையை மங்கல சரீரமாக அமைத்துக் கொண்டவள், ஆகமங்களாகிய அவயவங்களால் அழகாய் இருப்பவள், வேதசாரம் முழுதும் ஆபரணமாகக்க கொண்டவள், ஸ்ரீவித்யா மூலமந்த்ரத்தை முகமண்டலமாகவும், நாதபிந்துக்களை புது யௌவனப்பருவமாகவும் கொண்ட த்ரிபுரஸுந்தரி மாதாவை மனதில் த்யானிக்கிறேன்.

9.காலிகா திமிர குந்தலாந்த கன ப்ருங்க மங்கல விராஜினீம்

சூலிகா சிகரமாலிகா வலயமல்லிகா ஸுரபிஸெளரபாம்மி

வாலிகா மதுரகண்டமண்டலமனோ ஹராநநஸரோருஹாம்

காலிகா மகில நாயிகாம் மநஸி பாவயாமி பரதேவதாம் II

அகில உலகத்துக்கும் நாயகியான காளிபரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். அவள் மிகக்கரிய கூந்தல் கத்தையுடன் விளங்குகிறாள். தலைக்கு மேல் அலங்காரமாக வைத்துக் கொள்ளப்பட்ட மல்லிகை, மிகுந்த நறுமணத்தை கூட்டுவிக்கிறது. தாமரை மலரொத்த முகத்தின் வசீகரத்தன்மை, அந்த தேவியின் மிருதுவான கன்னத்துக்கப்பால் மேலும் அதிகரித்துள்ளது.

10.நித்யமேவ நியமேந ஜல்பதாம்

புக்திமுக்தி பலதாமபீஷ்டதாம் I

சங்கரேண ரசிதாம் ஸதாஜபேத்

நாமரத்ன நவரத்னமாலிகாம் II

முறைப்படி தினந்தோறும் படிப்பவர்களுக்கு, இவ்வுலக சுகபோகமும், முக்தியும் மற்ற விருப்பங்கள் அனைத்தும் கொடுப்பதும் ஸ்ரீ சங்கரர் இயற்றியதுமான ஒன்பது பத்யங்களாகிய ரத்னங்களால் ஆக்கிய மாலையை எப்பொழுதும் ஜபிக்க வேண்டும்.

நவரத்னமாலிகை முற்றிற்று.

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it