ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் மேற்பார்வையிலும், நிர்வாஹத்திலுமுள்ள, தஞ்சை ஜில்லா, பாபநாஸம் தாலுக்கா உமையாள்புரம் காவேரிக்கரை ஸ்ரீ ஆனந்த மஹா கணபதியின் வருடா வருடம் நடைபெறும் நிறமணி உத்ஸவம் 5-09-2004, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் மஹாபிஷேக வைபவமும், மாலையில் சந்தனக்காப்பு, புஷ்பாலங்கார சேவையும் நடைபெற்றது. அவ்வயமயம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சீர்காழி ஜயராமன் (பாட்டு) , ஸ்ரீ ஸீத்தாராமன் (உடன்பாட்டு) ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் (வயலின்) உமையாள்புரம் ஸ்ரீ மாலி மிருதங்கத்துடன் இன்னிசைக் கச்சேரி மிக விமரிசையாக நடைபெற்றது.