தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அதிஷ்டான மண்டப

தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா

தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அதிஷ்டான மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹம் செய்து, மாநாட்டைத் துவக்கி வைத்தார்கள். கர்மானுஷ்டானம், பூஜை-விரதங்கள் மற்றும் குடும்பச் சடங்குகள் அவசியம் கைகொள்ளப்பட வேண்டும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய தர்ப்பணாதி - ஸ்ரார்த கர்மாக்களை நடத்திவைக்க வேண்டிய பொறுப்பு புரோகிதர்களுக்கு இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொண்டு, கர்மாக்களையும் உரிய முறையில் செய்து வைத்தால், நலம் பெருகும் என்று குறிப்பிட்டார்கள்.

துவக்கத்தில் சங்கச் செயலாளர் ஸ்ரீ ஆ.கெ. நரசிம்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்புச் சொற்பொழிவு நிகழ்திய ஸ்ரீ டி.என்.எஸ். கோதண்டராம சர்மா அவர்கள், புரோகிதர்களின் பணிச் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். தற்காலத்தில் புரோகிதர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியன பற்றி அலசிபேசினார்.

பின்னர், ஸ்ரீமடம் இராமாயணம் ஸ்ரீநிவாஸன் அவர்கள், புரோகிதர்களுக்குப் பயன்படும்படியான பல யோசனைகளைத் தெரிவித்தார்.

ஏறக்குறைய நாநூறு புரோகிதர்கள், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் தம் திருக்கரத்தால் எல்லாப் புரோகிதர்களுக்கும் சம்பாவனை செய்து பாராட்டினார்கள்.

புரோகிதர் நல GF என்ற பெயரில் ஒரு GF துவங்கப்பட்டது. புரோகிதர்கள் பயிற்ச்சி முகாம் நடத்தி, புரோகிதர்களுக்குச் சடங்குகளில் நல்ல பயிற்ச்சி கொடுக்க வேண்டும் என்று, ஸ்ரீ மடத்திற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் நிறைவுரையில், புரோகிதர்களின் பொதுப் பணிகளைப் பாராட்டி ஆசி வழங்கினார்கள். இது போன்ற மாநாடுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடத்த வேண்டும் என்று ஆசிர்வதித்தார்கள்.