சங்கரரும் இதர ஸித்தாந்தங்களும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வைதிக காரியங்களை எல்லாம் விட்டு விட்டுத் தத்வம் என்ன என்று தியானம் பண்ணிக் கொண்டு உட்காருவதைத்தான் ஆசார்யாள் முடிந்த முடிவான நிலையில் சொன்னார். ஆனால் புத்தரைப்போல, ஆரம்ப தசையிலேயே எல்லாரும் வேதகர்மாவை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் நிறையக் கர்மா பண்ணிப் பண்ணி, அதனால் சித்த சுத்தி அடைந்த அப்புறந்தான் அதைவிட்டு ஆத்ம விசாரம் பண்ணவேண்டும் என்றார். முதலில் மீமாம்ஸை சொல்கிற கர்மாவை ஒப்புக்கொண்டே கடைசியில் பௌத்தம் சொல்கிற கர்மாவை விட்ட நிலைக்குப் போகவேண்டும் என்றார்.

பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் ஒப்புக்கொண்டு இன்னொரு நிலையில் ஆக்ஷேபித்தவர் நம் ஆசார்யர்கள். இவை ஒவ்வொரு அம்சத்தையே முடிந்த முடிவாகப் பிடித்துக் கொண்டிருந்தன என்றால் ஆசார்யாள் இந்த எல்லா அம்சங்களையும் சேர்த்து harmonise பண்ணி [இசைவித்து]க் கொடுத்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பௌத்தமும் பாரத ஸமுதாயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸாங்கியம்
Next