ஸ்ரீ சங்கர மடம்
காஞ்சிபுரம்
தேவார நன்னெறி பாடற் போட்டி
1. தேவாரம்: -
கீழ்காணும் எல்லாப்பதிகங்களையும் (30) முழுமையாக மனப்பாடம் செய்து, எந்தவொரு பதிகத்தையும் ஒப்பித்தல் வேண்டும்.
1. திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் (10)
1. தோடுடைய செவியன் - சீர்காழி (பிராமபுரம்)
2. மறையுடையாய் - திருநெடுங்களம்
3. மந்திரமாவது நீறு - (திருனீற்றுப்பதிகம்) ஆலவாய் (மதுரை)
4. வேயுறு தோளி பங்கன் - (கோளறு பதிகம்) பொது
5. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி - (நமசிவாயப் பதிகம்) பொது
6. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் (நமசிவாயப் பதிகம்) பொது
7. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - சீகாழி (பிரமபுரம்)
8. சடையாய் எனுமால் - திருமருகல்
9. மட்டிட்ட புன்னையம் - மயிலாப்பூர்
10. என்ன புண்ணியம் செய்தனை - திருவலஞ்சுழி.
(!!) திருநாவுக்கரசர் (அப்பர்) அருளிய பதிகங்கள் (10)
1. கூற்றாயினவாறு - திருவதிகை
2. சொற்றுணை வேதியன் - (நமசிவாயப் பதிகம்) பொது
3. கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி - திருவாரூர்
4. எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி - திருவதிகை.
5. வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி - கயிலாயம்
6. பொறையுடைய பூமி நீரானாய் போற்றி - கயிலாயம்
7. பாட்டான நல்ல தொடையாய் போற்றி - கயிலாயம்
8. தலையே c வணங்காய் - (திரு அங்கமாலை) பொது
9. மாசில் வீணையும் மாலை மதியமும் - பொது
10. பண்ணினேர் மொழியாள் உமைபங்கரோ - திருமறைக்காடு
(!!!) சுந்தரர் அருளிய பதிகங்கள் (10)
1. பித்தா பிறை சூடீ - திருவெண்ணெய்நல்லூர்
2. கங்கைவார் சடையாய் - திருவாவடுதுறை
3. மீளா அடிமை உமக்கே ஆளாய் - திருவாரூர்
4. நீள நினைந்தடியேன் - திருக்கோளிலி
5. மற்றுப்பற்று எனக்கு இன்றி - பாண்டிக் கொடுமுடி (நமசிவாயத் திருப்பதிகம்)
6. வடிவுடை மழு ஏந்தி - கூடலையாற்றூர்
7. ஆலந்தான் உகந்து அமுது செய்தானை - கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்)
8. நெய்யும் பாலும் தயிரும் கொண்டு - ஒண்காந்தன் தளி (காஞ்சிபுரம்)
9. தேனெய்புரிந்துழல் - கச்சி அனேகதங்காவதம் (காஞ்சிபுரம்)
10. செண்டாடும் விடையாய் - திருக்காளத்தி
II .திருவாசகம், திருப்புகழ்:-
பதிகங்களை முழுமையாக மனனம் செய்து தேர்வில் எந்தவொரு பதிகத்தையும் ஒப்பித்தல் வேண்டும்.
(!) மாணிக்க வாசகர் அருளிய திருவாசகப் பதிகங்கள் (10)
1. சிவபுராணம்
2. குயிற்பத்து
3. திருப்பள்ளியெழுச்சி
4. அடைக்கலப்பத்து
5. அதிசயப்பத்து
6. கழுக்குன்றப் பதிகம்
7. அருட்பத்து
8. பிடித்து பத்து
9. ஆனந்த மாலை
10. அச்சோப் பதிகம்
(!!) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (30) பாடல்கள்.
முழுவதையும் மனப்பாடம் செய்து, தேர்வில் எந்தவொரு பாடலையும் ஒப்பிக்க வேண்டும்.
1. கைத்தல நிறை கனி - விநாயகர் துதி
2. உம்பர் தருத் தேனு மணி - விநாயகர் துதி
3. முத்தைத்தரு பத்தித் திருநகை - முதற்பாட்டு
4. சந்ததம் பந்தத் தொடராலே - திருப்பரங்குன்றம்
5. தண்டையணி - திருச்செந்தூர்
6. முத்து தமிழ் மாலை - திருச்சந்தூர்
7. விறல் மாரன் ஐந்து மலர் வாளி - திருச்சந்தூர்
8. இயல் இசையில் - திருச்சந்தூர்
9. பரிமள களப - திருச்சந்தூர்
10. நாதவித்து கலாதீ - பழனி (ஆவினன்குடி)
11. அபகார நித்தைபட்டு - பழனி (ஆவினன்குடி)
12. சிவனார் மனங்குளிர - பழனி (ஆவினன்குடி)
13. திமிர உததியனைய - பழனி (ஆவினன்குடி)
14. ஆறுமுகம் ஆறுமுகம் - பழனி (ஆவினன்குடி)
15. வசனமிக வேற்றி - பழனி (ஆவினன்குடி)
16. காமியத்தழுந்தி - ஏரகம் (சுவாமிமலை)
17. சரணகமலாலயத்தை - ஏரகம் (சுவாமிமலை)
18. பாதி மதி நதி - ஏரகம் (சுவாமிமலை)
19. புமிய தனில் - கயிலை
20. உனைப் பல நீளும் - திருத்தணி
21. நினைத்தது எத்தனையில் - திருத்தணி
22. எழுகு நிறை நாபி - திருக்கழுக்குன்றம்
23. வேத வெறிபிலே - திருக்கழுக்குன்றம்
24. அன்பாக வந்து - திருச்செங்கோடு
25. எதிரிலாத பத்தி - கதிர் காமம்
26. அதல சேடனார் ஆட-பொது
27. காரணமதாக வந்து - பழமுதிர் சோலை
28. அறிவிலாப் பித்தர் - காஞ்சிபுரம்
29. துள்ளு மதவேள் - பொது
30. நீலங்கொள் மேகத்தின் - பொது
III.cF நூற் பாடல்கள்;-
கீழ்க் குறித்துள்ள நூல்களில் உள்ள பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து, ஒவ்வொன்றிலும் எவையேனும் பத்துப் பாடல்களை ஒப்பித்தல்- பொதுக்கருத்து கூறுதல்.
1. cF வெண்பா - முதல் 50 பாடல்கள்
2. நன்னெறி முழுவதும் - 40 பாடல்கள்
3. நல்வழி முழுவதும் - 40 பாடல்கள்
4. மூதுரை முழுவதும் - 30 பாடல்கள்
5. உலகநீதி முழுவதும் - 13 பாடல்கள்
IV. சேக்கீழார் அருளிய பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்)
கீழேகுறித்துள்ள பத்து நாயன்மார்களின் வரலாறுகளைச் சுருக்கமாகச் சொல்வதுடன், அவற்றையட்டிய எவையேனும் பத்துப் பாடல்களையும் (ஒவ்வொருவர் வரலாற்றிலும்) ஒப்பித்தல் வேண்டும்.
1. இளையான் குடிமாற நாயனார்
2. அமர் cF நாயனார்
3. ஏனாதி நாத நாயனார்
4. அரிவாட்டாய நாயனார்
5. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்
6. அப்பூதியடிகள் நாயனார்
7. பூசலார் நாயனார்
8. குங்குலியக் கலய நாயனார்
9. ஆனாய நாயனார்
10. சண்டேசுவர நாயனார்.
V. சைவ சித்தாந்த சாஸ்திரக் குறிப்பு.
இவ்வகுப்பு காஞ்சியில் செப்டம்பர் 2 அல்லது 3 ஆவது வாரத்தில் பத்து நாட்களுக்கு நடைபெறும். ஆர்வமுடையோர் அனைவரும் கலந்து கொள்ளலாம். அன்பர்களுக்கு இடவசதியும் உணவும் ஏற்பாடு செய்து தரப்படும்.
காலை, மாலை இருவேளைகளிலும் நடைபெறும் இவ்வகுப்பில்,
1. திருக்களிற்றுப்படியார்
2. திருவுந்தியார்
3. வினாவெண்பா
4. கொடிக்கவி - ஆகிய சாஸ்திர நூல்கள் நடத்தப்படும்.
உள்ளூர், வெளியூர் புலவர்கள், சமய ஆர்வலர்கள் (ஆடவர், பெண்டீர்) அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
போட்டிகளுக்குறிய நெறிமுறைகள்
1. எல்லாப் போட்டிகளிலும் தமிழகத்தில் உள்ள (1) மேனிலை, அனைத்துவகைக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்களும்;2. ஆசிரியர்கள், புலவர்கள் மற்றும் அலுவலர்களும், (3) 40 வயதினராகவுள்ள பொது மக்களும் (ஆடவர்களும் பெண்களும்) அனைவரும் பங்கு கொள்ளலாம்.
2. அவரவர் தத்தம் அறிவுத்திறனுக்கு ஏற்ற வகையில் பங்கு கொள்ளும் போட்டிகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
3. போட்டிகள் அனைத்தும் காஞ்சியில் ஸ்ரீமடத்தில் செப்படம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும். அவை பற்றிய விரிவான விவரங்கள் உரிய காலத்தில், பங்கு கொள்ளும் அனைவருக்கும் அனுப்பிவைக்கப்படும்.
4. பரிசுகள்,
ஒவ்வொரு போட்டியிலும் முழுமையாக ஒப்பிக்கும் அனைவருக்கும் ரொக்கப்பரிசு ரூ.1500/-ம் பத்துப்பேருக்கு ஆறுதல் பரிசு ரூ 500/-ம் வழங்கப்படும். பங்கு கொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
5. சாஸ்திர வகுப்பு செப்டம்பர் மாதம் இரண்டு, மூன்றாவது வாரத்தில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காஞ்சியில் ஸ்ரீமடத்தில் நடைபெறும். வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்குத் தங்கும் இட வசதியும், உணவும் ஏற்பாடு செய்து தரப்படும். நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும். வகுப்பு பற்றிய பிற விபரங்கள் உரியகாலத்தில் பங்கு கொள்வோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
6. இப்போட்டிகளில் பங்கு கொள்ள வரும்புவோர் முழுநீள வெள்ளைத்தாளில் பெயர், கல்வித்தகுதி, பணி, தெளிவான வீட்டு முகவரி (பின்கோடுடன்) , பங்கு கொள்ள விரும்பும் போட்டியின் பெயர் முதலியவைகளைத் தெளிவாக எழுதி, நீளக் கவரில் இட்டு, கவரின்மேல் "தேவார நன்னெறி பாடற் போட்டி"என்றெழுதி, மேலாளர், ஸ்ரீ சங்கரமடம், காஞ்சிபுரம் - 631 502, என்னும் முகவரிக்கு அனுப்பிவைத்து, பெயர்ப்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.