குருவை 'க்ஷேத்ரஜ்ஞ'னாக

குருவை ' க்ஷேத்ரஜ்ஞ ' னாக

இடம் தெரிந்தவன்-தெரியாதவன் என்று பார்த்தோமே! (முறையே) குருவும், சிஷ்யனுந்தான் அந்த இரண்டு பேர் - அந்த இரண்டிற்கும் இங்கே 'க்ஷேத்வித்', 'அக்ஷேத்ரவித்' என்ற வார்த்தைகளைப் போட்டிருக்கிறது. 'போட்டிருக்கிறது' என்றால் ஸ¨க்த KS - கவஷர் - யோஜித்து, பொறுக்கி எடுத்தா போட்டார்? இல்லை. ஒரு flash -ல் அகண்ட ஆகாசத்திலிருந்து அந்த சப்தங்கள் அவருக்கு ப்ரத்யக்ஷமாயிற்று. அதாவது ஈச்வர வாக்கே அப்படி வந்திருக்கிறது, அந்த KS மூலமாக!

க்ஷேத்ரம் என்றால் ஊர். அது ஒரு இடந்தானே? கந்தாரம் என்ற ஊருக்கு வழி சொன்னதாகத்தானே உபநிஷத் கதையிலும் பார்த்தோம்? பயிர் விளையும் வயலையும், பக்திப் பயிர் விளையும் புண்ய ஸ்தலங்களையுமே 'க்ஷேத்ரம்' என்று குறிப்பிட்டுச் சொல்வது. வேதாந்தத்திலேயோ 'க்ஷேத்ரம்' என்றால் நம்முடைய சரீரம். உழவன் உழுது பயிர் பண்ணுவதற்கு வயல் என்கிற க்ஷேத்ரம் களமாயிருக்கிற மாதிரி ஜீவன் கர்ம உழவு பண்ண இந்த சரீரம்.

இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே 1

என்று பகவான் கீதையில் சொல்கிறார். அந்த அத்யாயத்திற்குப் பேரே 'க்ஷேத்ர - க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்' என்பது. 'க்ஷேத்ரத்திற்கும் க்ஷேத்ரஜ்ஞனுக்கும் உள்ள பாகுபாட்டை அறியும் யோகம்' என்று அதற்கு அர்த்தம்.

"அது யார் 'க்ஷேத்ரஜ்ஞன்'?" என்றால், அவன்தான் இந்த ஜட சரீரத்துக்கு உயிரையும் அறிவையும் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஆத்மா. 'தான் க்ஷேத்ரம்' என்பதும் ஜடமான சரீரத்திற்குத் தெரியாத. அதை அப்படித் தெரிந்து கொண்டவன்தான் சரீரத்திற்கு உடைமைக் காரனான சரீரி என்ற அந்த க்ஷேத்ரஜ்ஞன்;'ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹ§: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:'.

'தெரிந்துகொள்பவன்' என்கிறவனாக க்ஷேத்ரஜ்ஞன் உள்ளபோது ஸ்வச்சமான தன் நிஜ ஸ்வரூபத்தில் அவன் இல்லை, அதாவதப்ரஹ்மமாக இருக்கவில்லை. மாயா ஸம்பந்தத்துடன்தான் இருக்கிறான். நிஜ ஸ்வரூபத்தில் அவன் தெரிந்து கொள்ள வேண்டியதாக வேறு விஷயமோ, தெரிந்தகொள்ளும் அறிவுமோகூட இருக்காது. தானாக இருக்கிற, தான் மட்டுமே ஒரே ஸத்யமாக இருக்கிற, அறிவாக இருக்கிற நிலை அது. பொதுவாக லோகத்தில் ஜடம், சேதனம் என்று முறையே அறிவற்றதையும் அறிவுள்ளதையும் சொல்கிற வழக்குப்படி, ஜடமான சரீரத்தை க்ஷேத்ரம் என்றும் அதிலே அறிவோடு - புலனறிவோடுதான், நிஜ ஸ்வரூபத்தை அநுபவத்தால் அறிகிற மெய்யறிவோடு அல்ல, புலனறிவோடு - இருக்கிற ஜீவனை க்ஷேத்ரஜ்ஞன் என்றும் சொல்வது. அறிவேயில்லாத ஜட சரீரத்திலிருந்து பல படி உசத்தி வைத்து நிஜ ஸ்வரூப மெய்யறிவான அநுபூதி பெற்ற ஞானியாக வேதாந்த சாஸ்த்ரத்தில் சொல்வது. கிருஷ்ணபரமாத்மாவும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் நேர் அர்த்தப்படி பார்த்தால், சரீரமும் தெரியாத ஞானியாயில்லாமல், சரீரத்தைத் தனதென்று தெரிந்து கொள்கிற அஞ்ஞானிதான் க்ஷேத்ரஜ்ஞன். இந்த நிலையில்தான் அம்பாளை (க்ஷேத்ரம் - க்ஷேத்ரஜ்ஞன் இரண்டையும் ரக்ஷிக்கும்) 'க்ஷேத்ர - க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ' என்று ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருப்பது. ஸ்வ - ஸ்வரூபத்தில் உள்ள

க்ஷேத்ரஜ்ஞனுக்குப் பாலனமே வேண்டியதில்லை!அம்பாளுக்கும் ஆத்மாவாக இருக்கிறவனவன்!"அத்தனை க்ஷேத்ரங்களிலும் (சரீரங்களிலும்) க்ஷேத்ரஜ்ஞனாக இருப்பது நானே" - "க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரஷ§" என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிற போது மாயை கலந்த, கலக்காத ஆகிய இரண்டு ஸ்திதிகளிலுமே என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் கொடுத்திருக்கிறார். இரண்டு மட்டுமில்லை, மூன்றுகூட!அசட்டு வேஷம் போட்டுக்கொண்டு நாம் ஒவ்வொருவருமாக அவர் இருப்பது ஒன்று, நம்மையெல்லாம் கட்டி ஆளுகிற ஈச்வரனாக த்வைத ப்ரபஞ்சத்தை நடத்திவைப்பது ஒன்று. த்வைதக் கலப்பற்ற நிர்குண ப்ரஹ்மமாக இருப்பது ஒன்று. மூன்று விதத்திலும் அவர் நம்முடைய சரீரத்தை மூன்று வித்யாஸமான நிலைகளில் அறிகிற க்ஷேத்ரஜ்ஞராக இருக்கிறார். நிர்குணத்தில் அந்த 'அறிகிறது' என்பது கார்யமில்லை. அது க்ஷேத்ரமே இல்லை என்று கண்டு கொள்ளும் அநுபவம்!

'க்ஷேத்ர - ஜ்ஞன்' என்றால் 'க்ஷேத்ரத்தை அறிந்தவன்'. இது தன் சரீரம் என்று அறிந்திருக்கிறவன் கீழ்நிலையில் இருக்கிறான். 'அப்படியில்லை, இந்த சரீரம் வெறும் மாயா கல்பதிமே தவிர, ப்ரஹ்மஸ்வரூபமான தனக்கு ஸம்பந்தப்பட்டதில்லை' என்று அதைப் பற்றிய - அது பொய்யே என்ற உண்மையை - அநுபவத்தில் அறிந்தவன் மேல் நிலை க்ஷேத்ரஜ்ஞன். அவன்தான் நிஜமான க்ஷேத்ரஞ்ஜன். அதாவது க்ஷேத்ரஜ்ஞன் என்றாலும் ஞானி என்றாலும் ஒன்றே. க்ஷேத்ரம் பொய் என்று அறிந்ததோடு ப்ரஹ்மந்தான் மெய் என்றும் அறிந்தவன் அவன்.

இந்த தத்வச்சிக்கலில் இப்போது ஏன் உங்களை இழுத்து விட்டிருக்கிறேனென்றால், வழியறிந்தவனை வேத மந்த்ரத்தில் என்னவென்று சொல்லியிருப்பதகாச் சொன்னேன்? 'க்ஷேத்ரவித்' என்றுதானே? 'க்ஷேத்ரவித்' என்றாலும் க்ஷேத்ரஜ்ஞன் என்றுதான் அர்த்தம். 'ஜ்ஞ', 'வித்' என்ற இரண்டும் அறிவதையே குறிப்பிடும்.

'ஜ்ஞ'வை இங்கிலீஷில், jna என்றும் gna என்றும் இரண்டுவிதமாக எழுதுகிறார்கள். G-'p' என்பதோ J -வுக்கான ஜகார சப்தமாகவே இருக்கிறது! Gnosis என்று க்ரீக்கில் இருப்பதை இங்கிலீஷிலும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஞானம் என்றே அர்த்தம். ஸ்பெல்லிங்படி 'gno' என்றிருந்தாலும் 'g' -ஐ ஸைலன்டாக்கி, உச்சரிப்பில் 'நோஸிஸ்' என்றே சொல்வார்கள். 'நோ' என்றே, know என்கிற இன்னொரு வார்த்தையும் 'அறிவது' என்பதற்கு இருக்கிறது. அங்கேயும் ஸ்பெல்லிங்கில் முதலெழுத்தை ஸைலன்ட் பண்ணிவிடுகிறார்கள். Gnosis -ன் ரீ-ஏதான் இங்கே K ஆவது. ஸம்ஸ்கிருதத்தில் ரீணீ-காரமாகச் சொல்லும் அநேக வார்த்தைகளைத் தமிழில் ளீணீ-காரமாக்கி விடுகிறோமோல்லியோ, அப்படி! Gandhari -ஐ Kandhari என்பதாகப் பார்த்தோமே, அப்படி!

ஸம்ஸ்க்ருத 'வித்'திலிருந்துதான் wit. நாம் wit, witty என்றால் தமாஷ் என்று மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறோம். வாஸ்தவத்தில் with-கு முக்யமான மீனிங் 'அறிவு' என்பதுதான். 'outwit' பண்ணுவது' என்கிறபோது அந்த அர்த்தத்தில்தானே சொல்கிறோம்?...

க்ஷேத்ரவித் என்ற வேதத்தில் வருவது பகவான் கீதையில் சொல்லும்

க்ஷேத்ரஜ்ஞன்தான். இப்படித் தெரிந்து கொள்ளும்போது அந்த மந்த்ரத்திற்கு அர்த்தம். "அஞ்ஞானியான சிஷ்யன் ஞானியான குருவிடம் விமோசனத்திற்கு வழி கேட்டுக் கொண்டு, அந்த வழியில் போகிறான். முடிவாக அந்தவழி கொண்டு விடுகிற பரமஸத்யததை நோக்கி அவர் உபதேசித்தபடி முன்னேறிப் போகிறான். இதுதான் உபதேசம் என்ற பரம மங்கள விஷயம். ஒரே போக்கில் நேராக ஓடுகிற பிரவாஹத்திலே எதிர்நீச்சுப் போடும் கஷ்டமில்லாமல் ஸெனக்யமாக மிதந்துகொண்டு பிரயாணம் பண்ணுகிறதுபோல அந்த அஞ்ஞானியும் விமோசனத்திற்கு அழகான, நேரான வழி தெரிந்து கொண்டுபோய்ச் சேருகிறான்" என்று ஆகும். (சிரித்து) என் 'பாஷ்ய'மும் கொஞ்சம் சேர்த்துச் சொன்னேன்!

உபநிஷத்திலே காட்டு வழி, அப்புறம் க்ராமம் க்ராமமாகப் போகணும் என்றெல்லாம் கொஞ்சம் பயமுறுத்தலாகச் சொல்லியிருக்கிறது!அது ச்ருத்யந்தம் (ச்ருதி எனும் வேதத்தின் முடிவு. வேதத்தில் முடிவான பாகமே உபநிஷத்) . இது ச்ருதியே (முதற் பாகமான ஸம்ஹிதை) . இதிலே பயமுறுத்தாமல், ஆனந்தமான படகுப் பிரயாணமாகச் சொல்லியிருக்கிறது - வாடர் - கரண்ட் போகிறபடியே ஆனந்தமாக மிதந்து கொண்டு போகிறது; (சிரித்து) down stream boating ! விசேஷமாக குரு அநுக்ரஹித்தால் இப்படி! கத்தி முனை என்றே இன்னொரு உபநிஷத் ரொம்பவும் பயமுறுத்திச் சொல்லியுள்ள ஸாதனா க்ரமமானது உல்லாஸப் பயணமாக ஆகிவிடுகிறது! அந்தக் கத்தி முனையையே Razor's Edge என்று தலைப்பாகப் போட்டு நம்முடைய வேதாந்தத்தில் ஈடுபாடுள்ள ஒரு பெரிய வெள்ளைக்கார நாவலிஸ்ட் பெரிசாகக் கதை கூட எழுதி ப்ரஸித்தமாயிருக்கிறது.

காட்டு வழி, கத்தி முனை நடப்போ, ஆற்றிலே ஆனந்தமாக boating -ஓ - எதுவானாலும் வழி சொல்லித் தருகிறவர் குரு.

கத்திமுனையைச் சொன்ன இடத்தில் உபநிஷத், அதற்குப் பூர்வாங்கமாக "வரர்களை நாடிப் போய் அவர்களிடமிருந்து அந்த வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்கிறது. வரான் - 'வரர்களை' என்கிறது. 'வரன்' என்றால் என்ன? 'முனிவரர்', ரிஷிவரர்' என்று படிக்கிறோமே, என்ன அர்த்தம்? முனிவரில் சிறந்தவர், ரிஷிகளில் சிறந்தவர், என்று அர்த்தம். அப்படி ஆஸாமியாக நாம் சொல்வது பெண்ணுக்குப் பார்க்கிற 'வர'னைத்தான்!நிஜத்தில் எத்தனை பிள்ளையாண்டான்கள் அப்படி இருப்பார்கள் என்பது கேள்வி!மாப்பிள்ளையாக வரிப்பது, ஒரு க்ஷத்ரியப் பெண் 'ஸ்வயம்வரம்' என்று தானே பர்த்தாவை வரிக்கிறது ஆகியவற்றில் வருகிற ஆஸாமியானதாலேயே அவன் வரனாக இருக்கிறான்!வ்ரு - வர் என்ற தாதுவிலிருந்து வரும் வார்த்தையே வரிப்பது. தேர்ந்தெடுப்பது என்று அர்த்தம் அப்படி சொன்னால், அநேகம் பேர் இருப்பதில் நம்முடைய choice -ஐ select செய்வது. இருக்கிறதற்குள் best -ஐத்ததானே Choose பண்ணுவார்கள்? Best -ஐ choice st என்றும் சொல்வதுண்டோன்னோ?

உபநிஷத்தில் 'வரர்' என்று மநுஷ்யர்களிலேயே உத்க்ருஷ்ட நிலைக்குப் போன குருமாரைத்தான் சொல்லியிருக்கிறது. 'உத்க்ருஷ்ட' என்பதையே 'ப்ரக்ருஷ்ட' என்றும் சொல்வதுண்டு. ஆசார்யாள் இங்கே அப்படித்தான் பாஷ்யம் பண்ணி, 'வரர்கள்' என்றால் ப்ரக்ருஷ்டமான ஆசார்யர்கள் என்று சொல்லி, அவர்களை "தத்-வித:" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'தத்' என்ற பரப்ரஹ்மத்தை,

'வித:' - அறிந்தவர்கள். (சிரித்து) அப்படிப்பட்ட வரர்களை குருவாக 'வரிக்க' வேண்டும் என்று உபநிஷத் சொல்கிறது. "தாயார் மாதிரிப் பரம கருணையோடு இங்கே உபநிஷத் வழி சொல்கிறது" - "ச்ருதி:அநுகம்பமாஹ மாத்ருவத்" - என்று ஆசார்யாளும் தாயாராய்க் கருணையோடு சொல்லியிருக்கிறார். கத்தி முனை என்று ப்ரஹ்ம வித்யையைச் சொல்லியிருக்கிறதே என்று பயப்படவேண்டாம், தாயாரின் அன்பு மாதிரியான குரு ப்ரஸாதம் அதை மழுக்கி மழமழப்பாக்கி விடும் என்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வேதத்தில் 'வழிகாட்டி'குரு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குரு:முடிவான லக்ஷ்யத்திற்கும் இடைநிலைகளுக்கும்
Next