பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஒன்று கவனிக்க வேண்டும் ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம

பாலாபிஷேகம் அல்ல; பாபிஷேகம்

ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும். ‘சந்தன’ ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால், அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன. ‘பால்’ என்கிற வார்த்தை ‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’ சேரும்போது, ல்+அ என்பது (குறிலான) ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாபிஷேகம்’ என்று தான் ஆகும். தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேபிஷேகம்’ ஆகுமே தவிர ‘தேனாபிஷேகம்’ இல்லை.
இதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தப்பு. ஷக்ஷரம் தான் சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட்+அக்ஷரம் என்றே இருப்பதால் ஷக்ஷரம் என்றே ஆகும்…….
கோவின் மலமும் பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும்.  ஸாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே. ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது. புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்யஸ்நானமாக இருக்கிறது! பாலக்ருஷ்ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான் என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று. ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர ஸௌபாக்யம்’ – என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார்.* அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில் திரும்புகிற ஸாயங்காலத்தையே ‘கோதூளி லக்னம்’ என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.
கோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள்.
*கோவிந்தாஷ்டகம், 5