மத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்

மத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்

மேற்சொன்னபடி மதத்தை வளர்ப்பதற்கான பணிகளின் செலவில் ஒரு பங்கைத்தான் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறோமேயன்றி முற்றிலும் அரசாங்கமே செலவழிக்கவேண்டும் என்று நாம் கூறவில்லை. அப்படிச் செய்தால் அப்போது இப் பணிகளுக்காக மக்கள் செலவிடுவதென்பது நின்றுவிடும். அது கூடாது. ஏனெனில் மத விஷயங்களில் மக்களின் ஆதரவே மூலதனம். உடலுழைப்பாக மட்டுமின்றி, திரவியத் தியாகமாகவும் அவ்வாதரவை அவர்கள் தர வேண்டும். அரசாங்கம் மட்டுமே செலவிடுவது என்றால் அப்போது மக்களின் அக்கறையும் ஈடுபாடும் குறைந்து அவர்களுக்கு மெத்தனம் ஏற்பட்டுவிடும். எனவே அரசாங்கம், மக்கள் ஆகிய இரு சாராரும் பங்கு கொண்டே மதாபிவிருத்திக்கான பணிகள் நடைபெறவேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அரசு ஆதரவு தரவேண்டிய இனங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மதச் சுதந்திர உரிமையும் மதமாற்றமும்
Next