மதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்

மதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்.

எனினும் தவிர்க்க முடியாமல் அவ்வாறான ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள நேரிடின், அப்போது ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறோம். அதாவது மத விதிக்கு முரணாகவும் தமது சமூகக் கொள்கைக்கு ஏற்பச் சட்டமியற்றலாமென ஓர் அரசாங்கம் கருதுகையில் இக்கருத்தை நாட்டின் சகலப் பிரஜைகள் குறித்தும் ஒரே போல் அமல் செய்து, அதாவது நாட்டில் வழங்கும் எல்லா மதங்களின் விதிகளையும் கருதாது சமமாக அமல் செய்து, பிரஜைகள் அனைவருக்கும் சம cF வழங்குதல் என்ற ஆதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

சில மதஸ்தரின் மத விதிகளில் மட்டும் புகுந்து மாற்றுவது, மற்றவர்களைத் தொடாமல் விடுவது எனப் பாரபட்சம் செய்தால் ஜனநாயகக் குடியரசு என்பதன் அஸ்திவாரக் கொள்கையிலேயே ஒன்றான சகலருக்கும் சம cF என்பதை அரசாங்கமே முறித்த மாபெரும் தவறாகும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மதக் கொள்கைகளுக்கு முரணான சட்டங்கள் கூடாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரசின் எல்லைக்கு அப்பாற்பட்ட துறை
Next