மாதா-பிதா விஷயம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆனாலுங்கூட மாதா பிதாக்களை இம்மாதிரி விஷயங்களில் ஒருத்தனால் சாந்தமாக எடுத்துச் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ பண்ண முடியவில்லை என்றால் அப்போது அவர்களிடம் சண்டைக்குப் போகப்படாது. அவர்களை மீறியும் செய்யக்கூடாது. சாஸ்த்ரப்படி மாதா பிதா வாக்ய பரிபாலனத்துக்கு அப்புறந்தான் எந்த தர்மமும். அதனால் அவர்கள் தப்பாகச் சொன்னாலும் அவர்களுக்குத் தெளிவு தரவேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்க வேண்டுமே தவிர மீறிச் செய்யக்கூடாது. அதன் பாபமோ புண்யமோ அவர்களைச் சேர்ந்தது என்று விட்டுவிட வேண்டும். இப்போது இந்த நிமிஷம், இந்த மாதா பிதாக்களின் கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படித்தான் கொஞ்சம் கடுமையாகவே சொல்லத் தோன்றுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பெரியோர்கள் உதாரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மனைவி மக்கள் விஷயம்
Next