அனைவருக்குமான நாமம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் ‘நல்வழி’ என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், “சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை” என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வைஷ்ணவர் கூறும் பெருமை
Next