முக்யமான இரு அரசக் கடமைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்படி ராஜாவுக்கு, ராஜாங்கத்துக்குப் பல கார்யங்களையும் கௌரவமான பண்புகளையும் கொடுத்திருந்தாலும் அர்த்த சாஸ்த்ரமானது இவற்றில் இரண்டை மிகவும் முக்யமானவையாகச் சொல்லியிருக்கின்றன. இதுவரை சொன்னவையெல்லாம் அநேகமாக ரக்ஷணையில் வருகிறவை. இப்போது சொல்லப்போகிற இரண்டும் சிக்ஷணையில் வருபவை. ரக்ஷிப்பதற்கு அங்கமேதான் தார்மிகமாக சிக்ஷிப்பது. பயிரை வளர்க்க வேண்டுமானால் களையைப் பிடுங்கி எறியத்தான் வேண்டும். உள்நாட்டில் குற்றம் பண்ணுகிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து சிக்ஷிப்பது, வெளிநாட்டு எதிரி ராஜாவையும் ஸைன்யத்தையும் யுத்தத்திலே சிக்ஷிப்பது என்ற இரண்டும் ராஜாவின் கார்யங்களில் தலையான இடம் பெறுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அரசனுக்கிருந்த கட்டுப்பாடுகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உள் நாட்டு தண்ட cF
Next