மல்யுத்தம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஜீவனத்துக்குப் பணமும் அவசியந்தான்; வைராக்யம், ஸந்நியாஸம் என்று உபதேசித்தால் நடைமுறைக்குப் பிரயோஜனமில்லையென்றே அர்த்த சாஸ்த்ரத்தைக் கொடுத்தாற்போலவே, சரீர பலத்தாலும் ஆயுத பலத்தாலும் ரக்ஷித்துக் கொள்ள வேண்டியதும் அவசியந்தான் என்றே தநுர்வேதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆயுதமில்லாமலே குத்துச் சண்டை, மல் யுத்தம் முதலியனவும் தன்னுடைய சரீர பலம் ஒன்றை மாத்திரமே கொண்டு செய்வதுண்டு. ‘மல்லர்’கள் என்று மல் யுத்த வீரர்களைச் சொல்லுவார்கள். மஹாமல்லன், மாமல்லன் என்றே நரஸிம்ஹ வர்மா என்கிற பல்லவ ராஜா பட்டப் பேர் வைத்துக் கொண்டிருந்தான். “என்ன மல்லுக்கு நிற்கிறே?” என்று கேட்பதிலிருந்து இத பெரிய யுத்த தந்திரமாயிருந்தது தெரிகிறது. க்ருஷ்ண பரமாத்மா சாணூரன், முஷ்டிகன் என்பவர்களோடு மல் யுத்தம் பண்ணிக் கம்ஸ ஸபையில் ஜயித்திருக்கிறார். ஜராஸந்தனோடு பீமஸேனன் மல் யுத்தந்தான் பண்ணி அவனைக் கொன்றான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கோட்டை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தர்மயுத்தம்
Next