தன் உணவைத் தானே செய்துகொள்வது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆஹாரத்தோடு ஸம்பந்த்ப்படுபவர்களின் சுத்தத்தைப் பற்றியும் சொன்னேன். ஸம்பந்தப்பட்ட வியவஸாயி, வியாபாரி ஆகியவர்களின் பரிசுத்தத்தை நாம் கவனிக்க முடியாவிட்டாலும், பண்ணிப் போடுபவர்களின் தன்மையை அவசியம் கவனிக்க வேண்டுமென்றேன். இதனால்தான் ஹோட்டல் கூடாது, ஹாஸ்டல் கூடாது என்கிறேன். அகத்திலுங்கூட தாயாரோ ஸம்ஸாரமோ பண்ணிப் பரிமாறினால் தோஷமில்லை என்று வழக்கமிருந்தாலும், நமக்கு நல்ல ஆத்மாபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் சாப்பிடுகிற ஆஹாரம் நன்றாக தெய்வ ஸம்பந்தமுள்ளதாக யிருக்கவேண்டுமாதலால், மற்றவர்கள் எவரும் அப்படி தெய்வ நினைப்போடுதான் சமைத்துப் போடுவர்கள் என்று நிச்சயமாக வைத்துக்கொள்ள முடியாததை முன்னிட்டு, வேறே யாரையும் எதிர் பார்க்காமல் அவருவரும் தன் சாப்பாட்டைத் தானே தயாரித்துச் சாப்பிட வேண்டுமென்று முடிவாக உத்தரவு போடத்தான் இத்தனையும் சொன்னேன். ‘ஸ்வயம் பாகம்’ என்பதாக இதை விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. இந்த ஸ்வயம்பாகத்தைத் தான் இப்போது முக்யமான topic ஆக எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உப்பை விலக்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஸ்வயம்பாகம்:புதுப்பாட்டு
Next