சூழ்விசும்பு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

சூழ்விசும்பு

அரசகுமரர் செல்லும்போது மங்கள் வாத்தியங்கள் முழங்குவது வழக்கம். அதுபோல் ஆழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது மேகங்கள் முழங்கின, கடலலைகள் அசைந்தாடின. பாடுவதில் வல்லவர்களான கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடினார்கள். காளங்களும் வலம் புரியும் இசைந்தன.தேவ மடந்தையுர் வாழ்த்தினர். இச்செய்தியைக் கூறுகிறது இத்திருவாய்மொழி.

பரமபதத்தில் தமக்குக் கிடைத்த நல்வரவேற்பை

ஆழ்வார் அனுபவித்துப் பாடுதல்

கலி விருத்தம்

பரமபதத்தில் ஆழ்வார்க்குக் கிடைத்த நல் வரவேற்பு

3755. சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின,

ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின,

ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்,

வாழ்புகழ் நாரணன் தமரைக்கண் டுகந்தே.

ஆழ்வார் பரமபதம் செல்லுங்கால் உலகோர் தொழுதனர்

3756. நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்,

பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்,

நீரணி கடல்கள்நின் றார்த்தன, நெடுவரைத்

தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகே.

தேவலோகத்தவர் ஆழ்வாரை எதிர்கொண்டனர்

3757. தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை

பொழிவனர், பூமியின் றளந்தவன் தமர்முன்னே,

'எழுமின்'என் றிமருங் கிசைத்தனர் முனிவர்கள்,

'வழியிது வைகுந்தற் ª 'கன்றுவந் தெதிரே.

வைகுந்தத்தில் ஆழ்வாரை யாவரும் தொழுதனர்

3758. எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்,

கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்,

அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழுக்கொத்த,

மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே

வைகுந்தத்தில் தேவர்கள் ஆழ்வாரை வரவேற்றனர்

3759. மாதவன் தமரென்று வாசலில் வானவர்,

'போதுமின் எமதிடம் புகுதுக' என்றலும்,

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்,

வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.

வைகுந்தத்தில் தேவமாதர் ஆழ்வாரை வாழ்த்தினர்

3760. வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை,

காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்,

ஆளுமின்கள் வானகம் ஆழியான் தமர்'என்று,

வாளண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

மருதரும் வசுக்களும் ஆழ்வாரைத் துதித்தனர்

3761. மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்,

தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர்,தொடுகடல்

கிடந்தவெங் கேசவன் கிளரொளி மணிமுடி,

குடந்தையெங் கோவலன் குடியடி யார்க்கே.

ஆழ்வார் வைகுந்தம் புகுதல்

3762. 'குடியடி யாரிவர் கோவிந்தன் றனக்ª 'கன்று,

முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள,

கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்,

வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே,

திருமாலடியார் வைகுந்தம் சேர்தல் விதி

3763. வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்,

'வைகுந்தன் தமரெமர், எமதிடம் புகுª 'கன்று,

வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்,

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.

வைகுந்தத்தில் ஆழ்வாருக்கு எதிரில் தேவமாதர்

பூரண கும்பம் ஏந்தினர்

3764. 'விதிவகை புகுந்தனர்' என்றுநல் வேதியர்,

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,

நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்,

மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

இவற்றைப் படித்தோர் முனிவராகிவிடுவர்

3765. வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து,

அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை,

கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபன்,சொல்

சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே.

நேரிசை வெண்பா

தமது பரமபத அனுபவத்தை மாறன் உரைத்தான்

சூழ்ந்துநின்ற மால்விசும்பில் தொல்லை வழிகாட்ட,

ஆழ்ந்ததனை முற்றும் அனுபவித்து, - வாழ்ந்தங்

முடிமகிழ்சேர் ஞான முனி.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருமாலிருஞ்சோலை மலை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  முனியே
Next