திருவல்லவாழ் (திருவல்லா ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

திருவல்லவாழ் (திருவல்லா ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம்)

கொல்லம் - எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில் நிலையத்திலிருந்து 3 மைல் தூரம், பஸ் வசதிகளும் உண்டு. திருவல்லாவில் சத்திரம் இருக்கிறது. தளிகை செய்து சாப்பிட்டுக்கொண்டு பக்கத்தில் உள்ள 6 க்ஷேத்திரங்களை ஸேவிக்கலாம்.

மூலவர் - கோலப்பிரான், திருவாழ்மார்பன், ஸ்ரீ வல்லபன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்யதேவி.

தீர்த்தம் - கண்டாகர்ண தீர்த்தம், பம்பா நதி.

விமானம் - சதுரங்ககோல விமானம்.

ப்ரத்யக்ஷம் - கண்டாகர்ணன்.

விசேஷங்கள் - இக்கோவிலில் ஸ¨தர்சன சக்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. த்வஜஸ்தம்பம் பொன் தகடு வேயப்பட்டுள்ளது. பெண்கள் ஸந்நிதிக்கு வெளியிலிருந்தே ஸேவிக்க வேண்டும். இத்தலத்தில் சங்கர மங்கலத்தம்மை என்கிற பதிவிரதை ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று ப்ருஹ்மசாரிக்கு பாரணை செய்வித்து வந்ததாகவும், தோலகாசுரன் இதற்கு இடையூறு செய்ததாகவும், பகவான் ப்ரஹ்மசாரி வேடத்தில் வந்து அசுரனைக் கொன்று பாரணைக்கு வந்தபோது, க்ருஷ்ணாஜினத்தினால் திருவாழ் மார்பை மறைப்பதைக்கண்ட அப்பதிவ்ரதையின் ப்ரார்த்தனைப்படி திருவாழ் மார்பை இன்றும் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பதாக ஐதீஹம்.

கண்டாகர்ணன் என்பவன், முதலில் சிவபக்தனாக இருந்து, பிறகு சிவன் உபதேசித்தபடி அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கும்போது தன் செவியில் க்ருஷ்ண நாமம் தவிர மற்ற எதுவும் விழாதிருக்க, தன் காதில் இரண்டு பொன்மணிகளை அணிந்து அது சப்திக்கும்படி அசைத்துக்கொண்டு தவம் செய்து மோக்ஷம் அடைந்ததாக ஸ்தலவரலாறு.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1808-17, 2674 9118)

நம்மாழ்வார் - 3205 - 15

மொத்தம் 22 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருமூழிக்காலம் (மூழிக்களம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கடித்தானம்
Next