மலைநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய குறிப்புகள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

மலைநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய குறிப்புகள்

இத்தலங்கள் வைணவத்தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன. தினந்தோறும் அபிஷேகமும் ஸ்ரீவளி என்று சொல்லப்படும் பிராகார ஊர்வலமும் உண்டு.ப்ரஸாதமாக சந்தனம், துளஸி, புஷ்பம் முதலியவற்றையும் கைபடாமல் தருகின்றார்கள். பெருமாளை ஆழ்வார்கள் அழைத்த பெயர்களை விட்டு வேறு பெயரால் அழைப்பார்கள். பெரும்பாலும் தாயார் ஸந்நிதிகளே கிடையாது. பெருமாள் அருகிலேயே தாயாரின் சிறிய உத்ஸவ மூர்த்தி இருக்கும்.சிலவிடங்களில் இதுவும் இராது. திருவல்லவாழில் விபூதி ப்ரஸாதம் கூட கொடுக்கிறார்கள். போத்தி என்னும் மலையாள பிராம்ணர்கள்

ஸ்நாநம் செய்து ஈரத்துணியோடு பூஜை செய்கிறார்கள். கர்ப்பக்ருஹத்தின் பக்கத்தில் மேடை ஒன்று இருக்கும். அதைத் தாண்டி யாரும் உள்ளே போகக்கூடாது. மஹாராஜாக்கள் உள்பட பெரிய மனிதர்கள் சிறிய மனிதர்கள் என்கிற பாகுபாடின்றி வேஷ்டியும் துண்டும் அணிந்துதான் செல்லுகிறார்கள்.

கையிலும் மூட்டை முடுச்சி எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. கொண்ட போனால் அவைகளை வாயிற் காப்போனிடம் கட்டணம் எதுவும் செலுத்தாமல் கோவில் நுழைவாயிலிலேயே வைத்துவிட்டு எடுத்துச் செல்லலாம். கோயில்களை மிகவும் தூய்மையாய் வைத்திருக்கிறார்க்ள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருநாவாய்
Next