திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம்)

சென்னையிலிருந்து 40 மைல் தூரத்திலும், திருவிடவெந்தையிலிருந்து சுமார் 7 மைல் அப்பாலும் உள்ளது. இரண்டு பாதைகளிலும் பஸ் வசதியும் மற்ற வசதிகளும் உண்டு.

மூலவர் - ஸ்தலசயனப் பெருமாள், சயனத் திருக்கோலம். புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம். வலது திருக்கரத்தை திரு மார்பின் மீது உபதேசமுத்திரையாக வைத்து, 'ஞானத்தமிழ் புரிந்த நான்' என்பதை விளக்குகிறார்.

உத்ஸவர் - ஸ்தலசயனத்துறைவார் (உலகுய்ய நின்றான்) .

தாயார் - நிலமங்கைத்தாயார். (தனிக் கோயில் நாச்சியார்) .

தீர்த்தம் - புண்டரீக புஷ்கரிணி, கருடநதி.

விமானம் - ககனாக்ருதி விமானம் (அனந்த விமானம்) .

ப்ரத்யக்ஷம் - புண்டரீக மஹரிஷி.

விசேஷங்கள் - பூதத்தாழ்வார் அவதாரஸ்தலம். இது கலைச் சிற்பங்கள் நிறைந்த ஸ்தலம். சிற்பி கலைகளுள் முக்கியமானவை பகீரதன்தவம், பஞ்சபாண்டவர் மண்டபம், கோவர்த்தன மண்டபம், அர்ச்சுனன் தவம், பஞ்ச

பாண்டவர்கள் ரதம் முதலியன. இதை அர்த்தஸேது என்று அழைக்கிறார்கள். இப்பெருமாள் கோவில் விஜயநகர அரசன் பராங்குசனால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. கடற்கரையிலுள்ள பூஜையில்லாத கோவிலிலும் ஸ்தலசயனப் பெருமாள் அழகாகச் சயனித்திருக்கிறார். ஆண்டாள், ராமன் ஸந்நிதிகளும் உள்ளன. புண்டரீக மஹரிஷி, தாமரஸ புஷ்பங்களைக் கொண்டு க்ஷீராப்திநாதனை அர்ச்சனை செய்ய நினைத்து, புஷ்பங்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்து கிழக்கு பக்கமாக செல்ல, சமுத்ரம் வழியை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலிட்டால் சமுத்திர ஜலத்தை கைகளால் இறைத்து விடலாம் என்று நினைத்து இறைக்க ஆரம்பிக்க, பகவான் வ்ருத்த ப்ராம்மண வேடம் கொண்டு, அவரை ஆகாரம் கேட்டு, ஆகாரம் கொண்டு வருவதற்குள் KS ஆராதிக்க வேண்டும் என்று எண்ணிய எம்பெருமானாக திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் (ஆதி சேஷன்) மேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் புண்டரீகர் கூடையில் வைத்திருந்த வாடாமல் இருந்த தாமரஸ புஷ்பங்களை சாற்றிக்கொண்டு மிக கம்பீரமாக சயன திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்க, 'ஸ்தலசயனப் பெருமாள்' என்ற பெயர் வழங்கி வருவதாக ஐதீஹம். கோயிலில் எம்பெருமான் வெறும் தரையிலேயே சயனித்து, திருவடியருகில் புண்டரீக KS கைகூப்பிய வண்ணம் ஸேவை தருகிறார். ஸ்ரீ மணவாள மாமுனிகர், பிள்ளைலோகம் ஜீயர் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம்.

குறிப்பு - இந்த ஸந்நிதி பிள்ளைலோகர் திருவம்சத்தினருக்கு உரியதாக விளங்குகிறது. கல்தேருக்குச் செல்லும் வழியில் ஞானப்பிரான் எழுந்தருளியுள்ளார். மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1088-1107, 1195, 1551, 2050, 2060, 2673 (73) , 2674 (120)

பூதத்தாழ்வார் - 2251

மொத்தம் 27 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருஇடவெந்தை (திருவடந்தை)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கடிகை (சோளசிங்கபுரம் - சோளிங்கபுரம்)
Next