திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில், தக்ஷண ஜகந்நாதம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில், தக்ஷண ஜகந்நாதம்)

கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து 1 1/2 மைல் தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டும். டவுன் பஸ்ஸிலோ, மாட்டு வண்டியிலோ கும்பகோணத்திலிருந்து வரலாம்.

மூலவர் - ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - செண்பகவல்லித் தாயார்.

தீர்த்தம் - நந்திதீர்த்த புஷ்கரிணி.

விமானம் - மந்தார விமானம்.

ப்ரத்யக்ஷம் -- நந்தி, CH.

விசேஷம் - ஸந்நிதியின் இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். இக்கோவிலின் அர்ச்சகர் வெளியூர்களுக்கும் சென்று கைங்கர்யம் செய்வதால், மாலை விளக்கேற்றும் நேரத்தில் செல்வது நல்லது. நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் 'நந்திபுரம்' என்றும் பகவானுக்கு 'நந்திநாதன்' என்றும் பெயர் உண்டாயிற்று. நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோவில் என்றும் இதனைக் கூறுவர். 'நந்தி பணி செய்த நகர்' என்றார் திருமங்கையாழ்வார். CH சக்கரவர்த்தி தன் உயிரைத்துறந்து புறாவின் உயிரை காப்பாற்ற திராசு தட்டில் தன் மாமிசத்தை வைத்து சமமாகாமல் இருக்க, தானே, புறாவின் எடைக்கு சமமாக எதிர்த்தட்டில் உட்கார்ந்த அதிசயத்தைக் காண, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கு முகமாக ஆனார்.

இந்த ஸந்நிதி வானமாமலை மடத்து ஆதினத்தில் உள்ளது.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1438 - 47 - 10 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருத்தஞ்சை மாமணிக் கோயில்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவெள்ளியங்குடி
Next