Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

இயல் காற்று (வடகலை ஸம்ப்ரதாயம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம

இயல் காற்று (வடகலை ஸம்ப்ரதாயம்)

பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்

பொருநல்வருங் குருகேசன் விட்டுசித்தன்,

துய்ய குலசேகரன் நம்பாண நாதன்

தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி,

வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்

மங்கையோர்கோ னென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்,

செய்ய தமிழ் மாலைகள் நாம்தெளிய வோதித்

தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே.


இன்பத்தி லிறைஞ்சுதலி லிசையும் பேற்றில்

இகழாத பல்லுறவி லிராகமாற்றில்,

தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக் கத்தில்

தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மை யாக்கில்,

அன்பவர்க்கே யவதரித்த மாயன் நிற்க

அருமறைகள் தமிழ்செய்தான்தாளே கொண்டு,

துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்

தொல்வழியே நல்வழிகள் துணிவார் கட்கே.


என்னுயிர்தந் தளித்தவரைச் சரணம் புக்கு

யானடைவே யவர்குருக்கள் நிரைவணங்கிப்,

பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்

பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி,

நன்னறியை யவர்க்குரைத்த உய்யக் கொண்டார்

நாதமுனி சடகோபன் சேனை நாதன்,

இன்னமுதத் திருமகளென் றிவரை முன்னிட்டு

எம்பெருமான் திருவடிக ளடைகின்றேனே.


ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடுமைதகர்க்கோர்,

வாரணமாயவர் வாதக் கதலிகள் மாய்த்தபிரான்,

ஏரணி கீர்த்தி யிராமாநுச முனி யின்னுரைசேர்,

சீரணி சிந்தையி னோம்சிந்தி யோமினித் தீவினையே.


நீளவந் தின்று விதிவகை யால்நினை வொன்றியநாம்,

மீளவந்தின்று வினையுடம் பொன்றி விழுந்துழலாது,

ஆளவந்தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்,

ஆளவந் தாரடி யோம்படி யோமினி யல்வழக்கே.


காளம் வலம்புரி யன்னநற் காதலடியவர்க்குத்,

தாளம் வழங்கித் தமிழ்மறை யின்னிசை தந்தவள்ளல்,

மூளுந்தவநெறி மூட்டிய நாதமுனி கழலே,

நாளுந்தொழு தெழுவோம் நமகர்ர்நிகர் நானிலத்தே?


ஆளுமடைக்கல மென்றெம்மை யம்புயத் தாள்கணவன்,

தாளினை சேர்ந்தெமக் கும்அவை தந்த தகவுடையார்,

மூளு மிருட்கள் விளமுயன் றோதிய மூன்றினுள்ளம்,

நாளு முகக்கவிங் கேநமக்கோர் விதி வாய்க்கின்றதே.


விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவு மடிமையெல்லாம்,

மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர் வண்துவரைக்

கண்ணனடைக்கலங் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்

பண்ணம ருந்தமிழ் வேத மறிந்த பகவர்களே.


சாற்றுமுறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு,

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா,உன்

செவ்வடி செவ்விதிருக் காப்பு


அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு,

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,

வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு,

படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.


ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா

ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்.


ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா

திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ


ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய

ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய.


நாமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ராதாயிநே

ஆத்ரேய பத்மநாபார்ய ஸ¨தாய குணசாலிநே.


ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்

ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்


வாழி யிராமா நுசப்பிள்ளான் மாதகவால்,

வாழு மணிநிக மாந்தகுரு, - வாழியவன்

மாறன் மறையுமிரா மாநுசன் பாடியமும்,

தேறும் படியுரைக்கும் சீர்.


வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே,

மன்னபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே,

கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே,

கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே,

செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே,

திருமலைமால் திருமணிமாய்ச் சிறக்கவந்தோன் வாழியே,

தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே,

செந்தமிழ்த் நூப்புல் திருவேங்கடவன் வாழியே.


நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ,

மாநகரின் மாறன் மறைவாழ, - ஞானியர்கள்

சென்னியமணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!

இன்னுமொரு நூற்றாண் டிரும்.


வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன்

வாழியவன் பதராவிந்தமலர் - வாழியவன்

கோதிலாத் தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்

தீதிலா நல்லோர் திரள்.

ஆண்டாள் வாழித்திருநாமம்

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடம் தோன்றுமூர், - நீதியால்

நல்லபத்தர் வாழுமூர், நான்மறைக ளோதுமூர்,

வில்லிபுத்தூர் வேதக்கோ னூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்,

வேத மனைத்துக்கும் வித்தாகும், - கோதைதமிழ்

ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை,

வையம் சுமப்பதூஉம் வம்பு.


திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பிரபந்த காயத்திரி   - இராமானுச நூற்றந்தாதி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  இயல் சாத்து (தென்கலை ஸம்ப்ரதாயம்)
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it