Untitled Document
பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் வியாசர் பூஜை நடத்தினார்கள்

July,3 2012 காஞ்சிபுரம்

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிஜி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீமடத்தில் வியாசர் பூஜை நடத்தினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், ஆஷாட மாதம் பௌர்னமி நாள் அன்று வியாசர் பூஜை மிக விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். அன்றய புன்னிய தினத்தில் பகவான் விஷ்ணுவின் அவதாரமான, முனிவர் வியாசரிடம் இருந்து தொடங்கி நமது எல்லா ஆன்மீக குருமார்களுக்கு, விசேஷமாக பூஜைகள் செய்து அவர்களிடம் பிரார்தனை செய்ய வேண்டும். பதினெட்டு புராணங்கள், மஹாபாரத காவியம் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் எழுதி, வேதங்கள் வகைப்படுத்துவுதன் மூலம் மனித இனத்திற்கு பெரும் சேவை செய்தார் முனிவர் வியாசர்.

அன்று காலை, ஸ்ரீ ஆதி சங்கரரின் உற்சவ மூர்த்தி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் சுற்றி நான்கு ராஜ வீதி வழியாக ஸ்ரீமடதிர்கு பவனி வரபட்டது.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் குரு பூர்ணிமா அன்று பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளை தரிசித்து அவர்களின் ஆசி பெற்றார்கள். தூயதாக்கப்பட்ட மந்திர அக்க்ஷதை பக்தர்களுக்கு நாளை (4 ஜூலை 2012) வழங்கபடும்.

மூன்று மாதம் சாதுர்மாச்ய விரதம் போது மாலை நடைபெறும் குரு வந்தன நாத ஸமர்பனம் இசை நிகழ்ச்சி ஸ்ரீ கதரி கோபால்னாத்தின் சாக்சாஃபோன் கச்சேரியுடன் துவங்கியது. அவருக்கு துணையாக வயலினில் செல்வி கன்னியாகுமாரி, மிருதங்கத்தில் ஸ்ரீ குருவாயூர் துரை மற்றும் கன்ஜிராவில் ஸ்ரீ அனிருத் ஆத்ரேயா பங்கேற்றனர்.

His Holiness performing Vyasa Puja Their Holinesses performing Puja Their Holinesses performing Puja His Holiness performing abhishekam His Holiness performing Harati Their Holiness performing Puja Their Holiness performing Puja Their Holiness performing Puja IMG_0864 His Holiness performing Deeparadhana His Holiness performing Deeparadhana Their Holinesses at the Adhishtanam Devotees witnessing Vyasa Puja Guru Paduka Elephant Jayanthi leading Adi Shankara's Procession Shri Adi Shankara's Procession Shri Adi Shankara Prasadam distributed in coconut shells Concert by Shri Kadri Gopalnath
Chaturmasyam 2012